1857 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடைபெற்ற சிப்பாய் கலகம் முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என்று அருணாச்சல பிரதேச துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றால் அங்கீகரிக்கப்படாத முதல் போர் 1839 இல் தாய் காம்தி மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்தது. கலகம் தொடங்கிய உத்தரபிரதேசத்தில் மீரட்டில் இருந்து கிழக்கே 2,400 கிமீ தொலைவில் இந்தப் போர் அரங்கேறியதாக சௌனா மெய்ன் தெரிவித்தார்
டிசம்பர் 24 அன்று கௌஹாத்தியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய் காம்திகள் ஆங்கிலேயர்களின் காலனித்துவத்தை எதிர்த்தார்கள். இதன் விளைவாக ஏற்பட்ட மோதலில் கர்னல் ஒயிட் உட்பட சுமார் 80 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
உத்தரகண்ட் பாஜகவில் உட்கட்சி பூசல்: அமைச்சர்,எம்.எல்.ஏ ராஜினாமா – பலத்தை இழக்கும் பாஜக
தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் தாய் காம்தி மக்கள் இன்று 1,00,000 க்கும் சற்று அதிகமாக அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் பகுதிகளில் வாழ்கின்றனர்.
நமது வரலாற்றை ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் அல்லாமல் நமது சொந்தக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டிய நேரம் இது. அவர்கள் துரோகிகளாகப் பார்த்து தண்டிக்கப்பட்டவர்கள் உண்மையில் நமது சுதந்திரப் போராளிகளும் நமது போர்வீரர்களும்தான்,” என்று மெய்ன் கூறியுள்ளார்.
தாய் காம்தி-பிரிட்டிஷ் இடையேயான போரை பிரிட்டீஷ் ஏகாதியபத்தியத்திடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக நடந்த முதல் போராக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்ட புத்தகங்களில் வடகிழக்கு முழுவதும் நடந்த சுதந்திரப் போராட்டங்களின் வரலாறுகளை நாடு சேர்க்க வேண்டும்என்றும் அவர் கூறியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக பழங்குடியின மக்கள் நடத்திய போர்கள் இந்திய வரலாற்றின் புத்தகங்களில் எங்கும் பிரதிபலிக்கவில்லை,” என்று அருணாச்சல பிரதேச துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source: The hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.