Aran Sei

புல்வாமா: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Credit: The Wire

ம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

புல்வாமாவில் உள்ள கடூரா கிராமத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இறந்த வெளி மாநிலத் தொழிலாளி பீகாரின் சக்வா பர்சாவில் வசிக்கும் முகமது மும்தாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் அதே மாநிலத்தின் ராம்போரில் வசிக்கும் முகமது ஆரிப் மற்றும் அவரது மகன் முகமது மஜ்பூல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

இந்த தாக்குதலுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்ததுடன், கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், புல்வாமாவில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் முகமது மும்தாஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். இந்த வெறுக்கத்தக்க தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூர் அல்லாதவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததில் இருந்து இதுபோன்ற கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Source: The Wire

Kallakurichi Sakthi School Owner Statement VS New CCTV Footage | Kallakurichi Issue new video | Deva

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்