Aran Sei

குழந்தை துப்பாக்கி பயன்படுத்துவதாக பதியப்பட்ட காணொளி – ட்விட்டர் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிய என்சிபிசிஆர் கோரிக்கை

ரு குழந்தை காற்றில் தோட்டக்களை பயன்படுத்துவது போன்ற வீடியோ பதியப்பட்ட விவகாரம், ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி மற்றும் ட்விட்டர் இந்தியா கொள்கை மேலாளர் ஷகுஃப்தா கம்ரான் மீது வழக்குப் பதிவு செய்யத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக என்சிபிசிஆர் தலைவர் பிரியங்கா கோயங்கா, ”ட்விட்டரில் பதியப்பட்ட காணொளியில், துப்பாக்கியைப் பயன்படுத்தும் குழந்தையை 4 – 5 ஆண்கள் ஊக்கப்படுத்துவதை காணலாம். இந்த காணொளி சட்டவிரோத நடவடிக்கை மற்றும் குழந்தைகளைப் பயங்கரவாத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. மேலும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில், பயங்கரவாததிற்கான ஆட்சேர்ப்பு பணிகளில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளை ட்விட்டர் அனுமதிக்கிறது” என குற்றம் சாட்டுகிறது.

‘பாசிச மோடி அரசை எதிர்த்த உறுதிமிக்க போராளி ஸ்டான் சாமி’ – அரசியல்தலைவர்கள், சமூக செயல்பட்டாளர்கள் இரங்கல்

காணொளியின் தோற்றம்குறித்து விசாரித்து என்.சி.பி.சி.ஆர் காவல்துறையினரிடம் என்சிபிசிஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

ட்விட்டர் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குறித்து தெரிவித்த என்சிபிசிஆர், “குழந்தை வீரர்களை பயன்படுத்தி இந்தியாவிற்கு எதிரான சட்டவிரோத பயங்கரவாதத்தை ஊக்குவிக்கச் சமூக ஊடக தளம் பயன்படுத்துவதால் இது செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்