Aran Sei

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராமர் கோயில் நிர்வாகம் – அவிழும் உண்மைகள்

ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதே நாளில் 1.037 ஹெக்டர் நிலத்தை 8 கோடி ரூபாய்க்கு ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கடந்த மார்ச் 18 அன்று மாலை 7.10 மணியளவில்,1.208 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள், 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், அடுத்த 5-10 நிமிடங்களிலேயே ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் குழுவானது, அதே நிலத்தை 18.5 கோடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த நிலம் வாங்கப்பட்ட அதேநாளில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வேறொரு உரிமையாளரிடம் இருந்து 1.037 ஹெக்டர் நிலத்தை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பட்டுள்ளது.

‘ராமா.. உன் பெயரில் ஊழலா?’ – அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழலென காங்கிரஸ் வேதனை

உத்தர பிரதேச மாநிலத்தின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் முறை – (ஐ.ஜி.ஆர்.எஸ்-உ.பி.) வலைத்தளம் வழியாக இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம், விசாரணை நடத்த வேண்டுமென  சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்