Aran Sei

தெலுங்கானாவில் சாலையோரம் பிறந்த குழந்தை மரணம் – பிரசவவலியோடு சென்ற தாயை வெளியேற்றிய ஊழியர்கள்

தெலுங்கானா மாநிலம் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள, பொது சுகாதார நிலையத்திற்கு வெளியே சாலையோரத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரசவ வலியின் காரணமாக ஜவஹர் நகர் பொது சுகாதார நிலையத்திற்கு சென்ற அந்தப் பெண்ணைப் போதிய வசதி இல்லாததால் அதன் ஊழியர்கள் சில மருந்துகளைக் கொடுத்து வெளியேற்றியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது – ஆய்வு

இந்நிலையில், பிரசவ வலி தாங்காத அந்தப் பெண் பொது சுகாதார நிலையத்திற்கு வெளியே உள்ள சாலையிலேயே பிரசவித்ததாகவும் அவரது குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் சம்பவத்தை அந்தப் பகுதியில் சென்ற நபர் காணொளியாகப் படம்பிடித்து வெளியிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

வேலைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 280% உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அந்தக் காணொளியில்,”பொது சுகாதார நிலையத்தில் எண்ணற்ற அவசர நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் அங்கு ஒரு மருத்துவரையோ செவிலியரையோ கூடப் பார்க்க முடியவில்லை. அவசர உதவி எண்ணுக்கு அழைத்தபோது அவர்களும் பதிலளிக்கவில்லை” என்று காணொளியை எடுத்தவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு இன்று பொது சுகாதார நிலையத்தைப் பார்வையிட்ட ஜவஹர் நகர் பகுதியின் மேயர் போதிய வசதிகள் செய்துதரப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை

சமீபத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம்குறித்து தேசிய குடும்ப நலஆணையம் வெளியிட்ட அறிக்கையில் 2016-17 ஆம் ஆண்டில் 1000 உயிரோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 27.7 விழுக்காடாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 26.4விழுக்காடாகக் குறைந்துள்ளது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்