Aran Sei

பையின்சா கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்து வாஹினி உறுப்பினர்கள் – கலவரக்காரர்களை தேடும் காவல்துறை

தெலுங்கானாவில் இருவேறு பிரிவினருக்கிடையிலான வன்முறையில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துத்துவ அமைப்பான ஹிந்து வாஹினி உறுப்பினர்கள் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பையின்சா நகரில் இருவேறு பிரிவினருக்கிடையில் நடந்த வன்முறை சம்பவத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,70 பேர் தேடப்பட்டுவருவதாகவும் அப்பகுதி காவல் ஆணையர் ஒய்.நாகி ரெட்டி தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீஷா ரவி “ஜோசப்” என பரப்பியவர்கள் மதவெறி பிடித்த இந்துத்துவவாதிகள் – சசி தரூர் கடும் கண்டனம்

மேலும் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் ஹிந்து வாஹினி அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று ஒய்.நாகி ரெட்டி கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

இந்த சம்பவம் குறித்து 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், காவலர், பத்திரிகையாளர் உட்பட 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும் , 4 வீடுகளைக் கலவரக்காரர்கள் கொளுத்தியுள்ளார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கானா கலவரத்தில் 12 பேர் காயம், 50 பேர் கைது – அமித் ஷா விசாரித்தார்

கடந்த மார்ச் 7 அன்று இரு சக்கர வாகனத்தில் வந்த இருவேறு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் பலர் இணைந்ததை அடுத்து மோதலாக மாறியது. ஒரு பிரிவினரின் வாகனம் சாலையில் வந்த மற்றொரு பிரிவினரின் மீது மோதியதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவீந்திரநாத் தாகூர் இந்துத்துவத்தை ஆதரித்தாரா? – ஹிமாத்ரி கௌஷ்

இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், “காவல் துறை ஹிந்து வாஹினி உறுப்பினர்களைத் துன்புறுத்தியுள்ளது,இது குறித்து உள்துறை அமைச்சருக்குத் தெரிவிப்பேன் ” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதை மறுத்துள்ள காவல் ஆணையர் நாகி ரெட்டி , இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமுகமில்லை எனவும், குற்றவாளிகளையே கைது செய்தோம் எனவும் ,அவர்களது அமைப்பைப் பார்த்து கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்