Aran Sei

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

க்கீம்பூர் கலவரம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் சர்மா மற்றும் உத்திரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவிற்கு எதிராக விவசாயிகள் போராடியபோது, அந்த கூட்டத்தில் கார் நுழைந்ததில் நான்கு விவசாயிகள் உட்பட் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

இது தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தக் கோரி இரண்டு நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த கடிதத்தைப் பொது நல மனுவாக கருதிய நீதிமன்றம். தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு ஏற்றது.

விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்வு, லக்கிம்பூர் கலவரத்தின் தற்போதை நிலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்திரபிரதசே அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

லக்கிம்பூர் சம்பவம் துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ள நீதிபதிகள், இதுவரை எத்தனை பேர்மீது வழக்கு பதியப்பட்டது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை அறிக்கையில் குறிப்பிடுமாறு தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரது தாயார் லவ்பிரீத் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்று உத்திரபிரதேச அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “இதனை உங்கள் (உத்திரபிரதேச) அரசிடம் உடனடியாக தெரிவியுங்கள். அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேவையானவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

டெல்லி கலவர வழக்கில் காவல்துறையை கேள்வி எழுப்பிய நீதிபதி – பணியிட மாற்றம் செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

இந்நிலையில் லக்கிம்பூர் கலவரம்குறித்து விசாரிக்க அலகாபாத் நீதிமன்ற நீதிபதி பரதீப் குமார் ஸ்ரீவத்சவா தலைமையிலான தனி நபர் விசாரணை குழுவை உத்திரபிரதேச அரசு நியமித்துள்ளது.

Source : The Wire

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்