Aran Sei

காவல்நிலையத்தில் உயிரிழந்த பெண்- தெலுங்கானா மாநில தலைமைச்செயலருக்கு பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்

தெலுங்கானா மாநிலத்தில் காவல்நிலையத்தில் தலித் பெண் இறந்தது தொடர்பாகத் தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் அம்மாநில தலைமை செயலாளருக்கும் காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீனா ஹாரிசின் ட்வீட் – சர்வதேச கவனம் பெறும் தலித் பெண் தொழிலாளர் நவ்தீப் கவுர்

கடந்த ஜூன் 18 அன்று, அம்மாநிலத்தின் யடாத்திரி – புவனகிரி மாவட்டத்தில் பாதிரியார் ஒருவர் வீட்டில் பணிபுரிந்த மாரியம்மா என்ற தலித் பெண்ணும், அவரது உறவினர்களும் சேர்ந்து அந்த வீட்டிலிருந்து 2 லட்சம் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறுகிறது.

இந்நிலையில், காவல் நிலையத்தில் அந்தப் பெண் திடீரென மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.

சாதி கடந்து காதலித்த ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட அவலம் – பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள பட்டியலினத்தோர் ஆணையம், காவல் நிலையத்தில் சித்திரவதை படுத்தப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென மாவட்டகாவல் துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதிமாறி காதலித்ததால் ஒருவர் கொலை – தலையைக் கொய்து பெண்ணின் சகோதரன் வெறிச்செயல்

அதுமட்டுமன்றி, குறிப்பிட்டக் கால அவகாசத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றால், அரசியலமைப்பு பிரிவு 338 ன் கீழ் நேரடியாக ஆஜராகி பதிலளிக்க உத்தரவிடப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்