மின் பகிர்மான நிறுவனங்கள் (டிஸ்காம்ஸ்) தனியார் மயமாக்குவதற்கு எதிராக தற்போது போராட்டம் நடத்தி வரும் சண்டிகர் மின் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தெலுங்கானா மாநிலப் பிரிவு நேற்று (பிப்பிரவரி 23) தர்ணா போராட்டம் நடத்தியுள்ளது.
சண்டிகர் மின் பகிர்மான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் ஒன்றிய அரசு அந்நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிட்டதாக தெலுங்கானா மின்வாரிய ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான பொதுத் தலைநகரான சண்டிகர், நீர் சக்தியில் ஒன்றியப் பங்கைப் பெறுகிறது. இருப்பினும், சண்டிகர் மின் பகிர்மான நிறுவனங்களின் விலை மதிப்புமிக்க நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன” என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.