Aran Sei

‘முகக்கவசம் வாங்க பணமில்லை’ – பறவைக் கூட்டை முகக்கவசமாக்கிய தெலுங்கானா முதியவர்

டந்த சில நாட்களாக, நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் தவிர்க்கப்படக்கூடாத தடுப்பு நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்திலும் பொது வெளியில் வருபவர்கள் முகக்கவசங்களை காட்டாயம் பயன்படுத்துமாறு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல்: மோடி தான் முக்கிய குற்றவாளி – சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு

இந்த நிலையில், அம்மாநிலத்தில் மக்புப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் நகரைச் சேர்ந்த மேகலா குர்மய்யா என்ற ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர், தன்னிடம் முகக்கவசம் வாங்குவதற்கு பணம் இல்லை என்பதாலும், முகக்கவசம் அணியாமல் போனால் விதிக்கப்படும் அபராத தொகையைக் கட்டாயம் செலுத்த முடியாது என்பதாலும் அதற்கு ஒரு புதிய வழியைக் கையாண்டுள்ளார்.

தனது ஓய்வூதியத்தை வசூலிப்பதற்காக மண்டல அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி இருந்திருக்கிறது. ஆனால் அவரால் முகக்கவசம் வாங்க முடியவில்லை. ஆனால், முகக்கவசம் இல்லாமல் அரசாங்க அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்த குர்மய்யா தனது சொந்த முயற்சியில் ஒரு முகக்கவசத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

“மோடியின் தற்பெருமையும் ஆணவமுமே இந்தியாவின் மோசமான நிலைக்கு காரணம்”: விமர்சித்த ஆஸ்த்திரேலிய பத்திரிகை; மறுத்த இந்திய தூதரகம்

ஒரு பறவையின் கூட்டினை எடுத்து அதனை முகக்கவாசமாக அணிந்து அரசு அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த முதியவரின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாகி வருகிறது.

Source : NEWS18 Tamilnadu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்