Aran Sei

அமித் ஷாவுக்கு எதிர்வினை: ‘மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங்’ – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்

மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங் என்று தெலுங்கானா மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் விமர்சித்துள்ளார்.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

‘அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது’ – அமித் ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்

இந்நிலையில், அமித் ஷாவின் கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள கே.டி.ராமாராவ், “மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங். நான் முதலில் இந்தியன். அடுத்து, பெருமைக்குரிய தெலுங்கானாவைச் சேர்ந்தவன். எனது தாய்மொழியான தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மற்றும் கொஞ்சம் உருது மொழியிலும் என்னால் பேச முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியைத் திணிப்பதும் ஆங்கிலத்திற்கு அவமரியாதை செய்வதும், உலகளாவிய ஆசைகளைக் கொண்ட இந்நாட்டின் இளைஞர்களுக்குப் பெரும் அவமானமாக இருக்கும். #இந்தி திணிப்பை நிறுத்துங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

அமித் ஷா பேசியதன் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இந்தி_தெரியாது_போடா

அமித் ஷாவின் இக்கருத்திற்கு எதிராக தெலுங்கு பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களிடமிருந்து வரும் முதல் எதிர்வினை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:

இந்தி குறித்த ஒன்றிய அரசின் உள்துறை அமித்ஷா பேசியது குறித்த பகுப்பாய்வு.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்