Aran Sei

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு 3 லட்சம் நிதியுதவி – தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தெலங்கானா அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த 700 முதல் 750 விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தெலங்கானா அரசு சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும். ஒன்றிய அரசும்விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியலோ அரசியல் – காமராசர் ஆட்சியும் இமானுவேல் சேகரன் கொலையும்

விவசாயிகளின் போராட்டத்தால்தான் வேறு வழியின்றி பிரதமர் மோடி இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அவற்றை திரும்பப் பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பெங்களூரைச் சேர்ந்த செயல்பாட்டாளர் திஷா ரவி மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிறோம் என முடிவு எடுத்தபின், தொடர்ந்து விவசாயிகளை துன்புறுத்துவதும், வழக்குககளை நடத்துவதிலும் அர்த்தமில்லை. விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், உதவும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த சட்டத்தைக் கொண்டுவர வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுப்பார்கள். விவசாயிகள் அதிகபட்ச ஆதரவு விலை கேட்கவில்லை, குறைந்தபட்சம்தான் கேட்கிறார்கள்.

பலமுனைகளில் வெற்றி பெற்ற விவசாயிகள் – அனைத்து முனைகளிலும் தோல்வியுற்ற ஊடகங்கள்

சுயசார்பு இந்தியா என்று நாம் பேசும்போது, சுயசார்பு வேளாண்மைப் பற்றியும் பேசுவது நாட்டில் அவசிமானது. ஏனென்றால் மக்கள் தொகை அதிகமுள்ள நாடு இந்தியா. 140 கோடியை மக்கள் தொகை நெருங்கிவிட்டது. வேளாண்மையில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால் மிக மோசமான விளைவில் இருப்போம். ஆதலால் வேளாண் துறையை சுயச்சார்பு அடைவதற்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு  தெலங்கானா அரசு 24 மணிநேரமும் இலவசமாக மின்சாரம் வழங்குகிறது. ஆனால், விவசாயிகளிடம் மின்கட்டணம் பெறக்கோரி ஒன்றிய அரசு நெருக்கடி அளிக்கிறது. இல்லாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவேன் என சர்வாதிகார மனப்போக்குடன் ஒன்றிய அரசு மிரட்டுகிறது என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

Source: timesofindia

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்