Aran Sei

கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மத அரசியல் செய்கிறதா பாஜக?’ : தேஜஸ்வி சூர்யாவுக்கு வலுக்கும் கண்டனம்

credits : the indian express

கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த 17 இஸ்லாமிய ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மீது சமூக வலைதளத்தில் கடுமையான கண்டனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நேற்றைய தினம், 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,10,77,410  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,30,168 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,980  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாஜக இளைஞர் பிரிவு) தேசிய தலைவரும், பெங்களூரு கிழக்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனகளில் படுக்கைகள் ஒதுக்குவதில் பெங்களூரு மாநகராட்சி முறைகேடு செய்வதாக, ஆளும் பாஜக அரசைக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் பத்திர்கையாளர் சந்திப்பில் தேஜஸ்வி சூர்யாவினுடைய மாமா மற்றும் பசவனகுடி சட்டமன்ற உறுப்பினர் ரவி சுப்ரமணியா, சிக்பெட் சட்டமன்ற உறுப்பினர் உதய் கருடாச்சார், பொம்மனஹல்லி சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, இவர்கள் அனைவரும் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அந்தக் காணொளியில், தேஜஸ்வி சூர்யா, கொரோனா கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டிருக்கும் 17 இஸ்லாமிய ஊழியர்களின் பெயரைப் பட்டியலிட்டு (மன்சூர் அலி, தஹிர் அலி கான், சாதிக் பாட்ஷா, முகமது சயீர், அல்சய் சயீர், உமய்த் கான், சல்மான் குரீத், சமீர் பாட்ஷா) ”யார் இவர்கள்? எப்படி இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்? எதன் அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தீர்கள்?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

முகலாயர்களை வீழ்த்த வேண்டும் – தேஜஸ்வி சூர்யா மீண்டும் சர்ச்சை பேச்சு

அப்போது உடனிருந்த தேஜஸ்வியின் மாமா ரவி சுப்ரமணியா, “அவர்களை மாநகராட்சிக்காக நியமனம் செய்துள்ளீர்களா அல்லது மதரசாக்களுக்காக நியமனம் செய்துள்ளீர்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். மற்றொரு சட்டமன்ற உறுப்பினர், ”யார் இவர்கள்?, ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவது போல இந்த 17 பேரை நியமனம் செய்துள்ளீர்களா?” என்று கேள்வியை முன்வைத்துள்ளார்.

’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா?’ அரபு நாட்டினர் கண்டனம்

பெங்களூரு மாநகராட்சி சார்பில் கொரொனா கட்டுப்பாட்டு அறையில், 205 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் சூழலில் மற்ற ஊழியர்களை விடுத்து 17  இஸ்லாமிய ஊழியர்களைப் பட்டியலிட்டதும், சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தும் போதும் தேஜஸ்வி சூர்யா அமைதியாக இருந்தது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

‘தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

இதையடுத்து அந்த 16 நபர்களின் பெயரும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு, பெங்களூரு மாநகராட்சியால் நியமிக்கப்பட்டிருக்கும் நபர்கள், ஆயிரக்கணக்கான பெங்களூரு மக்களைக் கொலை செய்கின்றனர் என்ற தகவலுடன் பகிரப்பட்டு வந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் புத்துயிர்ப்பு – நீதிபதி என்.வி ரமணா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர்

இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர், சர்ஃபராஸ் கான், கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் சம்பவங்களை மத ரீதியான கண்ணோட்டத்துடன் அணுகுவது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், தான் சாதி மதம் கடந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பலரின் உடல்களை அடக்கம் செய்வதில் உதவி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

‘மம்தா பானர்ஜி இன்று நம் நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார்’ – காங்கிரஸ் தலைவர் கமல் நாத்

இந்தக் காணோளி சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், தேஜஸ்வி சூர்யா, ”நான் அவர்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை, அவர்களின் பெயர்களைப் படித்து, அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார்கள் என்று மட்டுமே கேள்வியெழுப்பினேன்” என்று கூறியுள்ளதாக டெக்கன் ஹெரால்ட்-ன் செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்