ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி 11 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பீகாரில், மூன்று கட்ட தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடக்கவுள்ளது பிரதமர் மோடி இன்று நான்கு தொடர் பிரச்சாரங்களில் உரையாற்றவுள்ளார். இந்நிலையில் தேஜஸ்வி யாதவ், மோடியின் பீகார் வருகைக்கு முன்னதாக அவரை விமர்சிக்கும் வகையில் 11 கேள்விகளை ட்வீட் செய்துள்ளார்.
माननीय प्रधानमंत्री जी के बिहार दौरे से पहले उनसे बिहार की बेहतरी और विकास से जुड़े निम्नलिखित सवाल पूछना चाहता हूँ क्योंकि उनके अधीन नीति आयोग की रिपोर्ट अनुसार बिहार शिक्षा,स्वास्थ्य के सभी मानकों और सत्तत विकास सूचकांक में सबसे फिसड्डी राज्य है।https://t.co/BSRcoFPgZa
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 1, 2020
பிரதமரின் பிரச்சாரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சமூக ஊடகங்களில் தேஜஸ்வியின் கேள்விகள் பகிரப்பட்டன. அதில் வேலையின்மை, புலம்பெயர்வு மற்றும் பீகார் சிறப்பு அந்தஸ்து தொடர்பான பிரச்சினைகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
“கல்வி மற்றும் சுகாதாரங்களைப் பொறுத்தவரை பீகார் பின்தங்கியுள்ளது,” என்று தேஜஸ்வி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜக-ஜனதா தளம் கூட்டணியைக் குறிக்கும் வகையில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் “இரட்டை இயந்திர அரசாங்கம்” எனும் உவமையைப் பயன்படுத்தி தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பிரதமரே, குழாய் நீர்த் திட்டத்தைப் பற்றித் தொடர்ந்து கூச்சலிடும் பீகாரின் இரட்டை இயந்திர அரசு, மொத்த நிதியில் 4% மட்டுமே நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்காகச் செலவிட்டது ஏன்?” என்று கேட்டுள்ளார்.
“பிரதமரே, நாட்டின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியைச் சரிசெய்ய மொத்த நிதியில் 2 சதவீதத்திற்கும் குறைவாக ஏன் செலவிடப்படுகிறது என்று சொல்லுங்கள்?” என்றும் 15 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி செய்து வந்தபோதும், பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி தீர்க்கப்படாதது ஏன்?” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
பீகார் “வேலையின்மையின் மையம்” என்று தேஜஸ்வி யாதவ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இரட்டை இயந்திர அரசாங்கத்தின் கீழ் வேலையின்மை 46.6% ஆக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் வேலையிழந்து புலம்பெயர்ந்தோருக்கு அரசாங்கத் திட்டங்களின் பலன்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 11 லட்சம் குடும்பங்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்ட போதிலும், பீகாரில் 2,132 குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் வேலைக்குச் செல்ல முடிந்தது? அது ஏன்?” என அவர் கேட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களில் கட்சிகளுக்கு இடையே பெரும் மோதல் நிலவுகின்றன. முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் அரசாங்கத்தின் போது மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கின் நிலை மோசமாக இருந்தது என்று குற்றம்சாட்டிய மோடி. தேஜஸ்வி யாதவை ‘காட்டு ஆட்சியின் இளவரசன்’ (ஜங்லெராஜ் கா யுவராஜ்) என்று விமர்சித்தார்.
PM Narendra Modi himself is conducting so many rallies in Bihar. He is putting in a lot of effort because everyone knows that not a single Bihari is going to vote in the name of the present CM Nitish Kumar: LJP chief Chirag Paswan. #BiharElections pic.twitter.com/90Gi0PFYFu
— ANI (@ANI) November 1, 2020
இப்போது, “பிரதமர் நரேந்திர மோடியே பீகாரில் பல பேரணிகளை நடத்தி வருகிறார். தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாருக்கு (ஜனதா தளம்) ஒரு பீகாரி கூட வாக்களிக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர் (மோடி) நிறைய முயற்சி செய்கிறார்,” என லோக் ஜனஷக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.