Aran Sei

அரசு குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக்கிய தேஜஸ்வி யாதவ் – பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கடிதம்

பிகார் மாநில எதிர்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினருமான தேஜஸ்வி யாதவ், தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாவை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்.

ஆர்ஜேடி கொரோனா சிகிச்சை மையம் எனப் பெயரிடப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக ட்விட்டரில் காணொளிகளை வெளியிட்டுள்ள தேஜஸ்வி யாதவ், ”படுக்கைகள், ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருவதால், எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்தேன்” என பதிவுட்டுள்ளளார்.

அடுத்த ட்விட்டர் பதிவில், ”விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் நிதிஷ் குமாரை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அரசுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிகார் மாநில எதிர்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்