Aran Sei

‘இணைய சேவை முடக்குவதில் இந்தியா அவமானகர சாதனை’: அரசியல் விமர்சகர் பூனாவாலா உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்

க்கள் போராட்டங்கள் நடத்தும்போதெல்லாம் இணைய சேவையை முடக்குவது இந்தியாவுக்கே பெரிய அவமானம் என்றும்  அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான டெக்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம், 370வது பிரிவு நீக்கம், நவம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம், 2020 ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற கோரி நடைபெறும்  போராட்டம் ஆகிய  போராட்டங்களின்போது, மத்திய அரசால் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டது.

டெல்லியில் இணைய சேவை துண்டிப்பு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கடந்த நான்கு ஆண்டுகளில் 400 முறைக்கும் மேல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீண்ட இணைய முடக்கமாக நாடாளுமன்றத்தில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர்,  2019 ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 2020 ஆண்டு மார்ச் 4 ஆம் தேதிவரை மொத்தம் 223 நாட்கள், ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் முடக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அளவாக இந்தியாவில் தான் அதிக முறை இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது என்று ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில், மத்திய அரசின் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

இதுகுறித்து, இன்று (பிப்பிரவரி 8) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு, அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான டெக்சீன் பூனாவாலா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நீதிபதி அவர்களே, எப்பொழுதெல்லாம் இந்தியாவில் மக்கள் போராட்டம் செய்கிறார்களோ அப்பொழுதெல்லாம் அரசு இணைய சேவையை முடக்குகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசானது உலகிலேயே அதிக தடவை இணைய சேவையை முடக்கி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆனால், இது ஒரு அவமானகரமான சாதனை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அதிவேக இணையப் பயன்பாடு (4ஜி) முடக்கம்

போராட்டம் நடக்கும் போதெல்லாம் அரசு, இணைய சேவையைத் தன்னிச்சையாக முடக்குவது குறித்து ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவே முன்வந்து ஏற்று நடத்தும்படி கோரியுள்ள தெக்சீன் பூனாவாலா, “நீதிபதி அவர்களே, இணைய சேவை என்பது இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். மருத்துவ தேவைகள் தொடங்கி அன்றாட வாழ்க்கை நடைமுறைவரை, இன்றைய மனித வாழ்க்கையில் இணைய சேவையானது ஓர் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது.” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போதைய அரசும் அவர்களின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வெறுப்பை பரப்புகிறார்கள். ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இவற்றுக்கும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.” என்று அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான டெக்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு எழுதிய  கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்