Aran Sei

’என் தாய் உயிர் பிழைக்க வைத்திருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுக்காதீர்’ – காவல்துறையிடம் மண்டியிட்டு அழுத சிறுவன்

த்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லும் காவல்துரையினரிடம், அழுது மன்றாடும் ஒருவரின் காணொளி சமூகவலைதளங்களில் இருதினங்களாக பரவலாகி உள்ளது. அந்தக் காணொளியில், தன் தாயிக்காக இந்த ஆக்சிஜன் சிலிண்டரை  வைத்திருப்பதாகவும், அதை எடுத்து சென்றால், அவர் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் மண்டியிட்டு, கைக்கூப்பி அழுகிறார்.

ஆனாலும், சம்பவ இடத்தில் இருக்கும் காவலர்கள், அவரின் கண்ணீரை பொருட்படுத்தாது, தங்கள் வேலையைச் செய்துக்கொண்டிருக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

இந்நிலையில், அவர் பெயர் அன்ஷ் கோயல் என்றும் 17 வயதான அவர் தன் தாயிக்காக வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர் காவல்துறையால் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவரின் தாய் இறந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சிலிண்டர் விஐபி ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஏடிஜிபி ராஜிவ் கிருஷ்ணா, தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source : Times of India

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்