Aran Sei

இணையவசதிக்காக மலையுச்சிக்கு சென்ற பழங்குடியின மாணவன் தவறிவிழுந்து மரணம் – கிராமங்களில் போதிய வசதிகள் செய்துதர கல்வியாளர்கள் கோரிக்கை

டிசா மாநிலத்தில் இணையவகுப்பில் பங்கேற்கும்போது போதிய இணையத்தொடர்பு[network] கிடைப்பதற்காக,  மலை உச்சிக்கு ஏறிய பழங்குடியினச்  சிறுவன்  மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில்,  பழங்குடியினச்  சிறுவன்   மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் நிலவும் போதிய  இணையத்தொடர்பின்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் கிராமப்புறங்களில் நிலவும் இணையத்தொடர்பு சிக்கலைச் சரிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்களும், மாணவர்களும்  ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த  சிறுவனின் குடும்பத்தினர், “அவன் அவனது மூன்று நண்பர்களோடு மலைஉச்சிக்கு சென்ற நிலையில் மலைஏறும்போது பாறை வழுக்கி ஏறத்தாழ 50அடி ஆழத்தில் விழுந்துள்ளான்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்தச் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்த அப்பகுதி பத்திரிகையாளர் ரவீந்திரநாத், “இந்த பகுதியில் போதிய இணையவசதி மற்றும் செல்போன் தொலைதொடர்பு வசதி இல்லாததால் எண்ணற்ற மாணவர்கள்  இணையவகுப்பில் பங்கேற்க  மலைஉச்சியிலும், மரக்கிளைகளிலும் ஏறி வருகின்றனர்”  என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய அறிவியல் அகாடமியில் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ராம் ராமசுவாமி கூறுகையில், “பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் இலவச கையடக்கக் கணினி மற்றும் இணையவசதி ஆகியவற்றை வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source: the telegraph

தொடர்புடைய பதிவுகள்:

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – மூடப்பட்ட அதானி நிறுவனமும் மக்கள் போராட்டமும்

அகதிகளாகும் ஆப்கான் மக்களை ஏற்கும் உலகநாடுகள் – பெருந்துயரமும் மாண்புறும் மனிதநேயமும்

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்