Aran Sei

விவசாய சட்டங்கள் வாபஸ் – ஆசிரியர், மாணவர் அமைப்புகள் வரவேற்பு

விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டத்திற்கு பின், மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ஜனநாயக ஆசிரியர் முன்னணி(DDF), சத்ர யுவ சங்கர்ஷ் சமிதி, இந்திய மாணவர் சங்கம்(SFI), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISA), இந்திய தேசிய மாணவர் சங்கம்(NSUI) ஆகியவை இச்சட்டங்கள் திரும்பப் பெற பெற்றதை வரவேற்றுள்ளன.

உத்தராகாண்ட் தேர்தல் – பாஜகவை தோற்கடிக்க களமிரங்கும் பூசாரிகள்

ஆனாலும், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மாணவர் சங்கத்தின் டெல்லி கிளையின் தலைவர் சுமித் கட்டாரியா கூறுகையில், “நாங்கள் விவசாயிகளின் வெற்றிக்கு உறுதுணையாக ஊர்வலம் சென்றோம். விவசாயிகளுக்கு எங்கள் புரட்சிகர வணக்கங்களையும், போராட்டத்தில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நினைவஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு; சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ – சோனியா காந்தி

ஜனநாயக ஆசிரியர் முன்னணி(டிடிஎஃப்) மற்றும் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின்(டியுடிஏ) முன்னாள் தலைவரான நந்திதா நரேன் கூறுகையில், “இந்தியாவின் பெரிய ஜனநாயக போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள், தொழிலாளர்களின் தளராத முயற்சியின் விளைவாக ஒன்றிய அரசிற்கு விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் தியாகத்தின் பயனாய் மக்கள் பெற்ற மாபெரும் வெற்றி இது” என்று தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்