Aran Sei

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா சன்ஸ் குழுமம் – ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திற்கு விற்கப்படுதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா வசம் சென்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் கீழ், அதிகப்படியான தொகைக்கு டாடா சன்ஸ் குழுமம் ஏலம் கேட்டதை அடுத்து, நிறுவனம் அவர்களுக்கு விற்கப்பட்ட இருக்கிறது.

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

ரூ 12, 906 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தது. ஏலத்தில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங் தரப்பில் ரூ. 15,100 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது.

ஏர் இந்தியாவை டாடாவிற்கு விற்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அடங்கிய குழு இறுதி செய்ததாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் இயக்குநர் துஹின் குமார்  பாண்டே தெரிவித்துள்ளார்.

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

இந்த விற்பனை ஒப்பந்ததின்படி டாடா குழுமம் அளிக்கும் தொகையில் 15 விழுக்காடு இந்திய அரசுக்குச் செல்லும் என்றும், மீதமிருக்கும் தொகை ஏர் இந்தியாவின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஆகஸ்ட் 31, 2021 ஆம் தேதிவரை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 61,560 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதில் ரூ. 15, 300 கோடியை டாடா செலுத்த வேண்டும். மீதமிருக்கும் தொகையில், ரூ. 46,262 கோடிக்கு அரசு பொறுப்பேற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக’ – பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

”இந்த ஒப்பந்தத்தின் படி ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் லோகோவை 5 ஆண்டுகளுக்கு டாடா விற்க முடியாது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் 76 விழுக்காடு பங்குகளை விற்க நடைபெற்ற முயற்சி தோல்வியில் நிறைவடைந்ததை அடுத்து மோடி அரசு எடுத்த இரண்டாவது முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்