ஓர் அரசியல்வாதி இரவு விடுதிக்கு செல்வது என்பது, நாடாளுமன்றத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதைவிட மோசமான செயல் இல்லை என்று வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, நேபாளத்தில் இரவு விருந்தில் பங்கேற்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இதற்கு, பாஜக தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
https://mobile.twitter.com/taslimanasreen/status/1521462594317418496
இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள தஸ்லீமா நஸ்ரின், “ஓர் அரசியல்வாதி இரவு விடுதிக்கு செல்வது என்பது தவறான விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால், நாடாளுமன்றத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதைவிட மோசமான செயல் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
Gangai Amaran | திருமாவை அம்பேட்கரோடு ஒப்பிட்டது சரிதான் | Sanga Tamizhan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.