Aran Sei

நடிகை டாப்சி வீட்டில் சோதனை: பாரிஸ் பங்களா சாவி கிடைத்ததா? – வருமான வரித்துறையை பகடி செய்த டாப்சி

மார்ச் 3 ஆம் தேதியில் இருந்து, நடிகை டாப்ஸி பன்னு, இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானவரித் துறை சோதனை தொடர்பாக நடிகை  டாப்ஸி பன்னு, தனது ட்விட்டர் பக்கத்தில் 3 பதிவுகளைப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்ட முதல் பதிவில், “3 நாட்களாக 3 விஷயங்கள் தீவிரமாக தேடப்பட்டது. 1. கோடைக் காலம் வர இருப்பதால், எனக்கு சொந்தமானதாக சொல்லப்படும் பாரீஸ் பங்களாவின் சாவி தேடப்பட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

இரண்டாவது பதிவில், ”நான் ஏற்கனவே மறுத்து வந்த, என் எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாக சொல்லப்படும் 5 கோடி ரூபாய்க்கான ரசீது தேடப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது பதிவில், ”நிதியமைச்சர் கருத்தின் படி, 2013 ஆம் ஆண்டு என வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பான என் நினைவுகள்.

பி.கு : இனி நான் மலிவானவல் இல்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் டாப்ஸியின் இந்தத் தொடர் ட்விட்டர் பதிவுகள் வந்துள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “நான் எந்த ஒரு தனிநபரைக் குறிப்பிட்டு பேசவில்லை. இங்கே பெயர்கள் குறிப்பிட்டதால் அதைப் பேசுகிறேன். இதே ஆட்கள் இல்லங்களில் 2013 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அது ஒரு பிரச்னையாக ஆகவில்லை. ஆனால், இப்போது அது பிரச்னை ஆக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்