Aran Sei

2800 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்ட தமிழர்கள் – ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவில் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில், 2800 ஆண்டுகளுக்கு முன்னர் செழிப்பான கலாச்சாரத்துடன் தமிழர்கள் வாழ்ந்தது, அகழாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் (2004 – 2005) ஆதிச்சநல்லூரில், இந்திய அகழாய்வுத்துறையின் கண்காணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி மேற்கொண்ட அகழாய்வின் முடிவுகளைப் பிரத்யேகமாக வெளியிட்டுள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

அகழாய்வு மேற்கொண்டு 15 ஆண்டுகள் கடந்த பிறகும், மத்திய அரசு இதுவரை அந்த முடிவுகளை வெளியிடாத நிலையில், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, 293 பக்கம் கொண்ட அந்த ஆய்வறிக்கை தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட திட்டமில்லை – மாநிலங்களவையில் அமைச்சர் நித்யானந்த் பேச்சு

அந்த அறிக்கையில், ஆதிச்சநல்லூர் பகுதியில் இரும்பு காலத்தில் (கி.மு 850 – 650) வாழ்ந்த தமிழ் மக்களின், கலாச்சார செறிவு, பண்பாட்டு விழுமியங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் தொழில் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், நெல் மற்றும் கடலைகளை பயிரிட்டதாகவும், சக்கரத்தை உருவாக்குவதில் சிறந்தவர்களாக இருந்ததன் மூலம், பல வகை மண் பாண்டங்களை உருவாக்கியதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

இறந்தவர்களை வளைந்த நிலையில், தாழிக்குள் வைத்துப் புதைத்த அக்கால தமிழகர்கள், அத்துடன், பல்வேறு சிறு தாழிகளில் நெல் மற்றும் பயிறு வகைகளையும் தாழிக்குள்ளோ அல்லது வெளியிலோ வைத்துப் புதைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி

அங்குக் கிடைத்த எலும்புக் கூட்டை ஆய்வு செய்ததில், அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், நடுத்தர உயரத்தையும், பலமான உடலமைப்பையும் பெற்றிருந்ததாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டி.சத்தியமூர்த்தி தலைமையில் மேற்கொண்ட ஆய்வில், 600 சதுர அடியில், 178 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளதாகவும், அதில் ஒரே தாழியில் இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதும், சில தாழிகளில் ஆண், பெண் சடலங்கள் மற்றும் தாய் மற்றும் அவருடைய குழந்தையும் ஒன்றாக புதைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள கருப்பு மற்றும் சிவப்பு நிற முதுமக்கள் தாழிகள், வேறு எங்கும் இதுவரை கிடைத்ததில்லை என்று டி.சத்தியமூர்த்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஏராளமான மண் ஓடுகள் கிடைத்துள்ளதாகவும், அதில் நட்சத்திரம், வில்-அம்பு, ஏணி, மீன் மற்றும் அசோக பிராமி எழுத்தின் “மா” போன்ற வடிவங்களும் வரையப்பட்டுள்ளது என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கீதா பிரஸ் முதல் அர்னாப் கோஸ்வாமி வரை – இந்தியாவின் மாபெரும் வலதுசாரி ஊடக இயக்கம் – பகுதி 4

இதுகுறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் பேசியுள்ள டி.சத்தியமூர்த்தி, இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழிக்குள்ளும் இது போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்ட மண் ஓடுகள் கிடைத்துள்ளதாகவும், அதில் முதலைக்கு அருகில் நடனமாடும் பெண், வளர்ந்துள்ள கரும்பு, மான் மற்றும் வாயில் மீனுடன் நிற்கும் கொக்கு ஆகிய சுவாரஸ்யமான உருவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரு வண்ணங்களில், மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் வரையப்பட்டுள்ள அந்த ஓவியங்கள், தமிழர்களின் வசந்த காலத்தைக் குறிப்பதாகவும் டி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தோண்டி எடுக்கப்பட்ட 178 முதுமக்கள் தாழியில், 40 எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளதாகவும், அதில் 24 எலும்புக் கூடுகளை, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர், ராகவன் பத்மநாதன் ஆராய்ந்துள்ளதாக டி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தனி சின்னத்தில் நின்று அங்கீகாரமா? பெரிய கட்சி சின்னம் என்ற ஆதாயமா? – தேர்தலில் சிறிய கட்சிகளின் நிலை

ராகவன் மேற்கொண்ட ஆய்வில், எலும்பு கூடுகளில் காயங்களும், விரிசல்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அக்கால மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது தெரியவந்துள்ளதாகவும், சில காயங்கள் ஆயுதங்களால் தாக்கியதால் உருவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், டி.சத்தியமூர்த்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் கூறியுள்ளார்.

மண்டை ஓடுகளை ஆராய்ந்தபோது நெற்றிப்பகுதியில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டியுள்ள ராகவன், அது அதிக நேரம் கடல் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், முத்துக் குளிப்பவர்களுக்கும், பூஞ்சைகளால் நெற்றியில் ஏற்படும் கட்டியினால் உருவானது என்று தெரிவித்துள்ளதாக டி.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்