Aran Sei

’பாஜக-வை ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம்?’ – பரப்புரையில் பதிலளித்த பன்னீர்செல்வம்

த்தியில் ஆளும் பாஜக அரசை ஏன் அதிமுக அரசு ஆதரிக்கிறது என்ற கேள்விக்கு, சட்டமன்ற பரப்புரைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வர் பதிலளித்துள்ளார்

இன்று (டிசம்பர் 27) சென்னை ராயப்பேட்டை உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

அப்போது கூட்டத்தில் பேசிய தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், “தமிழக அரசியல் நேற்று, இன்று, நாளை என்று எப்போதும் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். மக்களுக்காகப் பல திட்டங்களைக் கொடுத்து அசைக்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார்.” என்று கூறியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக-வை ஆதரித்து வருவது குறித்து பேசும் போது, தமிழகத்திற்கு நலத்திட்டங்களைப் பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

மேலும், மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காத போதும் பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத்திற்கு பெற்றுத் தந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, “முதல்வராக நான் இருக்கலாம். ஒ.பன்னீர்செல்வம் இருக்கலாம். நாளை தொண்டர் ஒருவரும் முதல்வராக இருக்க முடியும். ஒரு தொண்டன் முதல்வராக இருக்கக்கூடிய கட்சி அதிமுக மட்டுமே.” என்று கூறியுள்ளார்.

`அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்கமாட்டார்கள்’ – திருமாவளவன்

மேலும், “சிலர் அதிமுகவை உடைக்க நினைத்தனர். ஆனால் அந்த முயற்சிகள் தவிடுபொடியாகின. எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்.ஜி.ஆர். பெயர் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்றும் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்