Aran Sei

அரசு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு இணையான ஊக்கத்தொகையை வேண்டும் – அன்னை கல்லூரி முன்னாள் மாணவர்கள் முதல்வரிடம் கோரிக்கை

credits : The Indian Express

ன்னை மருத்துவக் கல்லூரி எனும் தனியார் கல்லூரியில் இருந்து, மாற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் 144 மாணவர்களுக்கும்,  அரசு கல்லூரிகளில்  பணிபுரியும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும்  அதே ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள்  கோரிக்கை   விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவ மணவர்கள் அரண்செய்யிடம் பேசுகையில், “கடந்த  2016  ஆம் ஆண்டு நடைபெற்ற   மருத்துவ  கலந்தாய்வின்  மூலமாக  144 மாணவர்கள் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்  மருத்துவக் கல்லூரியான அன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்தோம். நாங்கள், முதலாம் ஆண்டு முடித்த  பின், அக்கல்லூரியில், போதிய  உட்கட்டமைப்பு  வசதிகள்  இல்லாத சூழலில்,  மருத்துவப் படிப்பை தொடர்வதற்கான எந்த சூழ்நிலையும் கல்லூரியில் இல்லை. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து, கல்லூரியின் பிரச்சனைகளுக்கு  தீர்வு காணும் வகையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தோம்” என்று தெரிவித்தனர்.

மேலும், ” இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்,  நீதிபதி கிருபாகரன், அன்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 144  மாணவர்களும்,  22 அரசு   மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து  தங்களுடைய படிப்பை தொடர்வர், என்று தீர்ப்பளித்தார்” என்று கூறினர்.

தடுப்பூசிகளின் குறைவான எதிர்ப்பு சக்தி : இந்திய கொரோனா வகை பற்றிய முதற்கட்ட ஆய்வு முடிவு

”நாங்கள், அரசு கல்லூரிகளில்  படிப்பை தொடர்ந்த போதும்,  தனியார் சுய நிதிக் கல்லூரியின் கட்டணமான ரூ.3 .25 லட்சத்தையே செலுத்தி வந்தோம்.  அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்  போலவே பயிற்சி  எடுத்து வந்த நாங்கள், தற்போது  இறுதியாண்டு தேர்வினை முடித்து அரசின் ஆணைப்படி அந்தந்த கல்லூரிகளில்,  கொரோனா பேரிடர் காலத்தில், பணிபுரியவும்  தொடங்கிவிட்டோம்” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

‘தடுப்பு மருந்துக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன; இந்தியா என்ற நாடு எங்கே போனது?’ – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், ”மற்ற அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு (Compulsory Rotational Residential Internship, CRRI) அளிக்கக்கூடிய ஊக்கத்தொகையான ரூ 21,200, அன்னை மருத்துவ கல்லூரியிலிருந்து மாற்றலாகி தற்போது 22 அரசு கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களாக செயல்பட்டு வரும்  144  மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்”  என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

மேலும் , ”தமிழக முதல்வர் அறிவித்துள்ள கொரோனா பேரிடர் சிறப்பு ஊக்கத்தொகை எங்களுக்கும் கிடைத்திட வழிவகைசெய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” என்று அம்மாணவர்கள் அரண்செய் -யிடம் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்