Aran Sei

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று  அனிதா நினைவு நூலகத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, நேற்று (டிசம்பர் 24) முதல் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நீட் மரணங்கள் – கூட்டு மனசாட்சியின் தோல்வி – சீ.நவநீத கண்ணன்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 25) செந்துறையை அடுத்த குழுமூரில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவாக உருவாக்கப்பட்ட நூலகத்தில் அவரது சிலைக்கு, உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை அனிதா நினைவு நூலகத்துக்கு தினசரி படிக்க வரும் மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். மேலும்,  நூலகத்திற்கு அருகில் தென்னங்கற்றையும் நட்டு வைத்துள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வால் இதுவரை நிகழ்ந்த உயிர்ப்பலிகள்

இதையடுத்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.5,000 கொடுக்குமாறு திமுக தலைவர் வேண்டுகோள் விடுத்தார். அப்போது நிதி இல்லை என்று கூறிய ஆளும் அரசு, தற்போது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 அறிவித்துள்ளது. தி.மு.க தலைவர் இன்னும் ரூ.2,500 வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.” என்று கூறியுள்ளார்.

மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை. நீட் தேர்வால் மற்றொரு உயிர் பலி

மேலும், “நான் எதிர்பார்த்ததைவிட அனைத்து பகுதிகளிலும் மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்