Aran Sei

’முதல்வர் ‘வாரிசு அரசியல்’ என்று ஓபிஎஸ் மகனை சொல்லியிருக்கலாம்’ – டி.ஆர்.பாலு

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனை நினைத்து தான் வாரிசு அரசியலைப் பற்றி முதல்வர் பழனிசாமி பேசுகிறார் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 30) சிவகங்கையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றுள்ளது.

‘பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா ஆகாத ரஜினி’ – ஜி.ராமகிருஷ்ணன்

மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு பிறகு, டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் ரஜினி நெருங்கிய நண்பர். எங்களுடைய நலம் விரும்பி அவர். ரஜினிகாந்த் அரசியலிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை விமர்சனம் செய்வது முறையல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

ரஜினி சொந்த விருப்பத்தில் அரசியலை விட்டு செல்வது அவரது உரிமை அது சரியா தவறா என்று மற்றவர்கள் ஆராயக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாரிசு அரசியல் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது, துணை முதல்வர் மகன் ரவீந்திரனை குறிப்பிட்டு சொல்லி இருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், “முதுகெலும்பு உள்ளவர்கள் தான் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். உங்களுக்கு அது கிடையாது.” என்று அவையில் வைத்தே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரனை டி.ஆர்.பாலு விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்