Aran Sei

பாரத் பந்த் : விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில்,  திமுக உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (டிசம்பர் 8), விவசாயச் சங்கங்கள் நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக எஸ்டிபிஐ மறியல்

இதைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த பல கட்சிகளும், வர்த்தகச் சங்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 8) திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன.

பாரத் பந்த் – நிலமற்ற விவசாயிகளின் கோரிக்கை என்னவாயிற்று?

இந்த மறியல் போராட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பங்கேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடு முழுவதும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். அதுவரை இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தின் காரணமாக, அவர் அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் அவர் அந்த இடத்தில் இருக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 500 க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்