Aran Sei

தமிழகத்தில் நாளை தொடங்கும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – எந்த மாவட்டத்தில்? எந்த இடத்தில்?

தமிழகத்தில் நாளை (ஜனவரி 2) 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 29 ஆம் தேதி, பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஒத்திகை நடைபெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

அதைத்தொடர்ந்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2 ஆம் தேதி ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தவும், மாநில தலைநகரங்களில் குறைந்தது 3 இடங்களில் ஒத்திகையில் ஈடுபடவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 1) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, விலையில்லா கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, தமிழகத்தில் 2, 881 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது சந்தேகம் – நிபுணர் குழு தலைவர்

நாளை (ஜனவரி 2) தமிழகத்தில் சென்னை, நீலகிரி, திருநெல்வேலி உட்பட 3 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது என்றும் அதில் சென்னை மாவட்டத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆரம்ப நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று ஐந்து இடங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களை பொறுத்தவரை, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை, நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, நெல்லை மாநகராட்சி மற்றும் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும்  இதற்காக 21, 000 செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்