Aran Sei

‘மூன்று நாள் போதாது’ – மு.க.ஸ்டாலின் கருத்து

credit: Dailythanthi

கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள சட்டப்பேரவையின் முதல் நாள் அமர்வில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டுக்கான இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில், கொரோனாவால் உயிரிழந்தப் பொது மக்களுக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதாகவும் அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

“மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகளான நீட் தேர்வினால் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள், புதிய கல்விக் கொள்கை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்ட வரைவு போன்றவற்றை விவாதிக்க மூன்று நாட்கள் போதாது. எனவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரை நீட்டிக்ககோரினோம். அதையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்” என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்