கந்துவட்டிகாரர்களின் மிரட்டலால் மன உளைசலுக்கு ஆளான பள்ளி ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள அக்காள் மடம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாரியப்பன் (52). இவர் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வட்டி மீது வட்டி தள்ளுபடி – நிதி வழங்குவதை உறுதி செய்க : ரிசர்வ் வங்கி
பூமாரியப்பன் மகன்கள் மற்றும் மகள் ஆகியோரின் கல்வி செலவிற்கும் நண்பர்கள் சிலருக்கு உதவி செய்யும் வகையிலும் குறைந்தபட்ச தொகையை சில நபரிடம் வட்டிக்கு வாங்கியுள்ளார். இந்தத் தொகைக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வட்டி செலுத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையில், நண்பர்கள் சிலர் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் வட்டி கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர். இதனால் பூமாரியப்பன் வாங்கிய அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியைக் கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
வட்டிக்கு மேல் வட்டி போடப்பட்டு, அதிகபட்ச தொகையாக மாறியுள்ளது. இந்த வட்டி பணத்தையும், அசல் தொகையையும் கேட்டு பணம் கொடுத்தவர்கள் ஆசிரியர் வீட்டில் வந்து அவரை தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளனர்.
இதற்கு பயந்த ஆசிரியர் நேற்று (டிசம்பர் 15) இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பூமாரியம்மன் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பூமாரியப்பன் தற்கொலை குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை
கடந்த சில நாட்களாகவே, இராமேஸ்வரம் தீவு பகுதியில் கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருகிறது. ஆசிரியர் ஒருவர் கந்து வட்டி கொடுமைக்கு உயிரிழந்தது மிகப்பெரிய வேதனையை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பூமாரியப்பன் தற்கொலை செய்ததற்கு காரணமாக இருந்த கந்து வட்டி கொடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூமாரியப்பன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.