Aran Sei

“போகிறேன், வர மாட்டேன் ” – அரசியலுக்கு முழுக்கு போட்ட தமிழருவி மணியன்

1996-ம் ஆண்டிலிருந்து தனது அரசியல் பிரவேசம் குறித்து முன்னுக்கு பின் முரணான கருத்தை தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் ”அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை” என்று நேற்றைய தினம் அறிவித்தார்.

இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் ரஜினிகாந்தை தமிழக அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கு தீவிரமாக செயல்பட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது ” என்று கூறியுள்ளார்.

’’மோடிதான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

” சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

“அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி

”நான் ஒரு போதும் அறத்திற்கு புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதரண வாடகை வீட்டில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது” என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘கண்ணா.. இப்பவும் இல்ல எப்பவும் இல்ல.. எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச’

”மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன” என்று அவர் கூறியுள்ளார்.

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

”மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

’பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா ஆகாத ரஜினி’ – ஜி.ராமகிருஷ்ணன்

”இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்” என்று தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்