Aran Sei

சித்தா, யுனானி, செவிலியர் கல்வி படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்க – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

த்திய அரசு சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள், செவிலியர் கல்வி மற்றும் உயிரி அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை விரிவுபடுத்தியிருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

“மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வே “கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது” என்று போராடி வரும் நிலையில், செவிலியர் கல்வி மற்றும் உயிரி அறிவியல் என்று விஸ்தரித்து இருப்பதும் மிகவும் அநீதியானது.
அது கல்லூரிகளில் விலங்கியல் தாவரவியல் தொடங்கி உயிரி தொழில்நுட்பம் மரபணுவியல் என நீள்கிறது.” என்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது.

“மத்திய அரசு புதிய கல்வி கொள்கைக்கான முன்னெடுப்புகளை தொடங்கியது முதலாகவே அதன் பாதக நோக்கங்களையும், அம்சங்களையும், அவை ஏற்படுத்தப் போகிற விளைவுகள் குறித்தும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து பல்வேறு வகைகளில் இயக்கங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது” என்றும், தற்போது நடைபெறவுள்ள தமிழக ” சட்டமன்றத் தேர்தலிலும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்பது பிரதான அம்சமாக மாறி இருக்கிறது” என்றும் அது கூறியுள்ளது.

தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக கூட்டணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

 

“உலகெங்கும் இல்லாத ஒரு தரத்தை, இந்திய மாணவர்கள், அவரவர் மாநில அரசுகள், அதன் நிதியிலும் ஆளுகையிலும் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் அமலாக்கம் செய்யும் என்பது யுனெஸ்கோ போன்ற கல்வி சார்ந்த சர்வதேச நிறுவனங்களின் தீர்மானங்களுக்கும், இந்திய கூட்டாட்சி விதிகளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளுக்கும், சமூக நீதிப் போராளிகளின் தியாகங்களுக்கும் எதிரானது” என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

‘நீட் தேர்வு முடிவுகளில் ஏன் இத்தனை குளறுபடிகள், குழப்பங்கள்?’- மு.க.ஸ்டாலின் காட்டம்

“தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கையை ஆராய மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை சட்ட மன்றங்களில் விவாதிக்கப்படக் கூட இல்லை” என்ற நிலையில், “மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை வழியாக முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவின் பள்ளிக் கல்வி முறைக்கு எதிரானது. பள்ளிக் கல்வி முறையையும் அதன் தரத்தையும் முற்றாக நிராகரிப்பது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருள் இழக்க செய்கிறது” என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

“தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வு என்பது உயர் கல்வி விரும்புவோருக்கு கூடுதல் சிக்கல்களையும் கூடுதல் பண விரையம் மற்றும் கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது. பள்ளி மையக் கல்வி என்பதற்கு மாற்றாக பயிற்சி மையக் கல்வியை நோக்கிய நிர்பந்தங்களை ஏற்படுத்துகிறது. நுழைவுத் தேர்வு முறை என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி நிலையங்கள் மூலம் கொள்ளையடிக்க வாய்ப்பு அளிக்கிறது” என்று நீட் தேர்வின் பொருளாதார தாக்கத்தை சுட்டிக் காட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இதனால், “கிராமப்புற ஏழை மாணவர்கள், பட்டியலின மாணவர்கள், விளிம்பு நிலை மாணவர்கள் அனைவரும் பயிற்சி பெற முடியாத சூழ்நிலையில் இது போன்ற கல்வி வாய்ப்பினை இழக்கும் நிலையை அரசே உருவாக்க வழிவகுக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது.

“கூட்டாட்சி மாண்புகள், சமவாய்ப்பு, சமநீதி மற்றும் எந்தவித தர்க்க ரீதியான நியாயங்களும் இல்லாத இந்த “நீட் போன்ற மையப் படுத்தப்பட்ட தேர்வுகளை” மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழ் நாடு அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்