Aran Sei

நீலகிரி பழங்குடிகளிடையே அதிகரித்து வரும் தற்கொலைகள் – இடப்பெயர்வு காரணமா?

நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் தற்கொலை விகிதம், தேசிய சராசரியை விட எட்டு மடங்கு அதிகம் என்றும் இதற்கு இடப்பெயர்வும் குடிப்பழக்கமும் முக்கிய காரணங்களாக உள்ளன என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்ட சுகாதார நல சங்கம் என்ற அமைப்பு, ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பனியா, காட்டுநாயக்கன், பெட்டா குரும்பா, முள்ளு குரும்பா ஆகிய நான்கு பழங்குடி சமூகங்களில்,  தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள் | Aran Sei

கடந்த பத்தாண்டுகளாக, சராசரியாக எட்டு என்ற எண்ணிக்கையில் இருந்த தற்கொலைகள், சென்ற ஆண்டு 25 முதல் 30 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் நடந்த தற்கொலைகளை விட மும்மடங்கு அதிகம்.

”கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள நான்கு பழங்குடி சமூகங்களில், பனியா சமூக மக்களிடையே தற்கொலை விகிதம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக 20 முதல் 40 வயது வரையிலான ஆண்களிடையே, இது மிகவும் அதிகமாக உள்ளது” என்று நீலகிரி மாவட்ட சுகாதார நல சங்கத்தின் உறுப்பினர் ஷைலஜா தேவி கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளார்.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது | Aran Sei

“மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவின் படி, கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் உட்பட, அந்த சமூக மக்களிடையே பொதுவாகவே குடிப்பழக்கத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “தற்கொலைகளுக்கு எப்போதும் பல காரணங்கள் இருக்கும். ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை காரணமாக சொல்ல முடியாது. ஆனால், இந்த பழங்குடி சமூகங்களுக்கு எளிதாக மது கிடைப்பது, இந்த தற்கொலைகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.” என்று மருத்துவர் ஷைலஜா கூறியுள்ளார்.

பிசில் மாரியம்மனை மீட்டெடுத்த பழங்குடி மக்கள் (aransei.com)

பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்கள் தங்கள் வாழ்க்கை சூழலை இழப்பதும், அருகில் உள்ள நகரங்களுக்கு புலம்பெயர்ந்து, அங்கே அந்நிய மனநிலையோடு வாழ்தலும், இந்த தற்கொலைகளுக்கு பின்னால் முக்கிய காரணங்களாக இருக்கிறது என்று  என்று நீலகிரி மாவட்ட சுகாதார நல சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிஜி எலமன சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து கூறுகிறது.

“உதாரணமாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பென்னை பகுதியில், காட்டுநாயக்கன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பரந்து விரிந்த, திறந்த வெளி வாழ்விடங்களில் வசிக்கும் பழக்கமுள்ளவர்கள். அப்படிப்பட்டவர்கள், பெரிய நகரங்களில் உள்ள கட்டடக் குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்து போகிறார்கள். இந்த வகையான மாற்றங்கள் நிச்சயமாக அவர்களுக்கு நீண்ட கால மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.”  என்று எலமன தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்