Aran Sei

ஒன்றை அறிவிப்பதற்கு முன் யோசிப்பதில்லையா? – அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை மாநகராட்சியில் குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா என்று அமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன் தினம் (டிசம்பர் 22) சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்  அறிவித்திருந்தார்.

குப்பைகளைக் கொட்ட கட்டணம் விதித்த மாநகராட்சி : திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு

குப்பை கொட்டுவதற்கு வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் , நட்சத்திர விடுதிகளுக்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் , தியேட்டர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ,அரசு அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3ஆயிரம் குப்பை கொட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் ரூ.500 முதல் ரூ.1000 , பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் , மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் , தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அதுக்கேற்றார் போல், அபராதமும் விதக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 24) குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

‘வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்

இது குறித்து, இன்று (டிசம்பர் 24), திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். அமைச்சர் தங்கமணி வாபஸ் பெற்றார் . ‘குப்பை கொட்டவும் வரி’ என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், திமுக ஆட்சி வந்து செய்யும் என்றேன். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாபஸ் பெற்றார் . அறிவிப்பதற்கு முன் யோசிப்பதில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,”எண்ணித்துணிக கருமம் என்று அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்