Aran Sei

’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

தான் ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, பாஜக உட்பட அவரது கூட்டணிக் கட்சிகள் யாரும் அப்படி சொல்லவில்லை என்றும் அவரை முதல்வராக நிறுத்தி ஓ.பன்னீர்செல்வமே கூட அவ்வாறு பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காணொலி மூலம் ஸ்டாலின் பேசியுள்ளார்.

’முதல்வர் ‘வாரிசு அரசியல்’ என்று ஓபிஎஸ் மகனை சொல்லியிருக்கலாம்’ – டி.ஆர்.பாலு

அப்போது, “அதிமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார்.” என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் நான்கு ஆண்டுகால முதல்வராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச் செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ திமுகவோ கருதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

’தமிழக முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு பின்பே அறிவிப்போம்’ – பாஜக மேலிடம்

“தான் ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளோ, குறிப்பாக பாஜகவோ அதைச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். பழனிசாமி முதல்வர் என்று ஓ.பன்னீர்செல்வமே பிரச்சாரம் செய்யவில்லை. இந்த சோகத்தை மறைக்க திமுக மீதும் என் மீதும் பழி போடுகிறார் பழனிசாமி.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

மேலும், “திமுகவைக் குடும்பக் கட்சி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். அரசாங்க கஜானாவிலிருக்கும் பணத்தையெல்லாம் தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் கொள்ளையடித்து மடைமாற்றம் செய்யும் குடும்ப ‘கான்ட்ராக்டர்’தான் பழனிசாமி. தனது குடும்பத்திற்குச் சொத்து சேர்க்கவே முதல்வர் பதவியையும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும் கடந்த 10 ஆண்டு காலத்தில் பயன்படுத்தி, தமிழ்நாட்டைப் பாழாக்கி வருகிறார் பழனிசாமி.” என்று விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்