Aran Sei

’ஈழத் தமிழர்களின் சுயமரியாதையைப் பறிக்கும் இலங்கை அரசு’ – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

ழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் ‘மாகாண ஒழிப்பு’ திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது, இந்திய – இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்  திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (டிசம்பர் 31) திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான  டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட உள்நோக்கத்துடன், ‘இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்’ என்று இலங்கை அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரானவரா?

‘ராஜபக்ச சகோதரர்கள்’ புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசும் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-வது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது என்று மேற்கோள்காட்டி, அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது என்று தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்

“இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல், இந்தியாவுடனான உறவை கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கை சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ, ஏன்? நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம், அதுவும் 13-வது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?” என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் எரியூட்டப்படும் உடல்கள் – இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்புத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அப்படியொரு முடிவு, ‘இந்திய – இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திமுகவின் சார்பில் கேட்டுக் டி.ஆர்.பாலு கொண்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கிலும், அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கிலும், இந்திய அரசின் தலையீட்டுடன் இலங்கை அரசு 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளை ஏற்படுத்தும் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தது.

இலங்கைக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி: ராஜபக்சேவுக்கு உறுதியளித்த மோடி

இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று சிங்கள தேசியவாதிகளும், தற்போதைய இலங்கை அரசின் அமைச்சர்களும்  தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

13 வது சட்டத்திருத்தத்தின் போது உறுதியளிக்கப்பட்ட காவல்துறை, நில உரிமை போன்ற அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மையினரின்  கட்சிகள் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதாக இலங்கையில் போராட்டம் – இந்தியாவிடம் கோரிக்கை

மறுபுறம், 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கொழும்புவில் உள்ள இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மோஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, ”இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி (நில உரிமை) அதிகாரங்கள் எவையும் இல்லை.” என்று தீர்ப்பளித்திருந்ததாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், “மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருக்கிறது.” என்று நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கத்திற்கே நிலத்தின் முழு அதிகாரம் என்று வரும் போது, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நிலத்தின் உரிமை இராணுவத்தின் கீழும் கட்டுப்படுத்தி வைக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்