Aran Sei

பெரியார் மீது அவதூறு – 50 அதிரடி போலீசார் பாதுகாப்பு

ரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில், சமூக வலைதளத்தில் பெரியார் குறித்து அவதூறாக எழுதியதாகவும், திராவிடர் கழகக் கொடியை அறுத்து விட்டு பெரியார் படத்தை எடுத்துச் சென்றதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராயர் என்கிற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மிகவும் பதட்டமான சூழல் நிலவியதால் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட அதிரடி காவல் துறையினர் பாதுகாப்புடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உலகின் "முதல் குடிமக்கள் காப்பியம்"என்ற பெருமையுடையது இளங்கோ இயற்றிய சிலப்பதிகாரம்…சேரசோழபாண்டிய நாடுகளை…

Posted by Rayar R on Tuesday, July 21, 2020

ராயர் மீது புகாரளித்துள்ள திராவிடர் கழகத்தின் செந்துறை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் அரண் செய்யிடம் பேசிய போது “ராயர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் எழுதி வருகிறார். பெரியார் படத்தின் மேல் தமிழின விரோதி என எழுதிப் பதிவிட்டிருக்கிறார். மேலும், டேபிளில் வைக்கக்கூடிய பெரியார் சிலையை குப்பைத்தொட்டியில் போட்டு அதைப் புகைப்படம் எடுத்துப் பதிவேற்றியிருக்கிறார். இது போன்று பெரியாரை இழிவுபடுத்தும் பதிவுகளை வெளியிட்டதோடு, பெரியாரின் பிறந்த நாளான செப் 17-ம் தேதி பொன்பரப்பி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்தை எடுத்துச் சென்றதோடு திராவிடர் கழகக் கொடியையும் அறுத்துள்ளார். பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் செயல்படும் ராயர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.

பள்ளி நாளில் தொடங்கிய பெரியார் மயக்கம், 2015 வரையிலும் தொடர்ந்தது. மே 2009 ல் இன்றைய திராவிட தலைவர்கள் தவறானவர்கள்……

Posted by Rayar R on Sunday, July 12, 2020

 

முத்தமிழ்செல்வனின் புகாரையடுத்து செப் 22-ம் தேதி ராயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது அமைதிக்கு கேடு விளைவித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்