Aran Sei

தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதாக இலங்கையில் போராட்டம் – இந்தியாவிடம் கோரிக்கை

ல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்திய தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி பகுதி மீனவர்கள் 36 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் பயன்படுத்திய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம்

நேற்று (டிசம்பர் 16) கைது செய்யப்பட்டவர்களில் 22 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இந்திய மீனவர்களின் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது, ”இலங்கை மீன்வளத்துறையை தொடர்பு கொண்டுள்ள இந்தியத் தரப்பு, எதிர்வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண அடையாளமாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு

உண்மையில் இந்தியத் தரப்பினரே எல்லை தாண்டும் செயற்பாடுகளை நிறுத்தி, தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”தடைசெய்யப்பட்ட தொழில் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. அதனால், எதிர்கால இலங்கை – இந்திய சந்ததியினருக்கு வாழ்வாதார பிரச்சினை ஏற்படும். அதைத் தவிர்த்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும்.” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்

இந்திய இழுவை படகுகள் அத்துமீறி, தங்கள் பகுதியில் மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் நேற்று முன் தினம் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நேற்றும் (டிசம்பர் 16) இரண்டாவது நாளாக நடைபெற்றது.

இந்திய இலங்கை அரசுகள் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லை மீறி தங்களது பகுதிகளில் வருகின்ற இந்திய மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தங்களது வாழ்வாதார தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரானவரா?

மேலும், எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்