Aran Sei

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம்

ச்சத்தீவு அருகில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் 18 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் நேற்று முன் தினம் (டிசம்பர் 14) காலை ஐந்நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்

அவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் நான்கு படகுகளையும், அதில் இருந்த 36 மீனவர்களையும் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 29 மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும்   7 பேர் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்கக்கோரி, டிசம்பர் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாக நேற்று (டிசம்பர் 15) ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 29 இராமேஸ்வரம் பகுதி மீனவர்களில், நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை, இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டு, வரும் 18 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு இன்று (டிசம்பர் 16) யாழ்ப்பாணம் மாவட்ட ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி அ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த 22 மீனவர்கள் தற்போது கடற்படை முகாமில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் கீழ்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம் மாவட்ட நீர்வளத் துறைக்கு உரியது.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

இதனால் கைது செய்யப்பட்ட 22 இராமேஸ்வரம் பகுதி மீனவர்களையும் பொறுப்பேற்குமாறு கடற்படை, மாவட்ட நீர் வளத்துறையிடம் கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த மாவட்ட நீர்வளத்துறையினர், எங்களிடம் கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு சாதனங்கள் உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு கைதிகளை பொறுப்பேற்க முடியாது என்று பதிலளித்துள்ளனர்.

“மீண்டும் ஒரு தெர்மாகோல் சாதனை” – மீனவத் தொழிலாளர் சங்கம்

மாவட்ட நீர்வளத்துறையினர் அளித்த இந்த பதிலைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 22 இராமேஸ்வரம் மீனவர்களை கடற்படை முகாமில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய பின்பு நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்தக் கைது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில்,“தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன், இலங்கை அரசு இலங்கைக் கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 60 லட்சம் முதல் 1.75 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிக்கவும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கின்றது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் – மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

மேலும், இதற்கு முன் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காததனால், அவற்றை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது குறித்து, இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் சங்க தலைவர்களில் ஒருவரான யேசுராஜுடம் அரண்செய் பேசியபோது, “இராமேஸ்வரத்தில் உள்ள 850 விசைப்படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மேற்கொண்டு போராட்டங்களை நாங்கள் நடத்துவோம்.” என்று தெரிவித்தார்.

வரும் டிசம்பர்  22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமீபத்தில் அறிவித்திருந்தார். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், “காணொளி மூலம் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக சொல்கிறார்கள். மீனவர்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அரசு அதிகாரிகள் மட்டும் பங்கேற்பார்கள் போல தோன்றுகிறது.” என்று கூறினார்.

தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு

 

மேலும், “இந்த பேச்சு வார்த்தையில் மீனவர்கள் பங்கேற்றால்தான், இருநாட்டு மீனவர்களின் பிரச்சனை குறித்துக் கலந்தாலோசிக்க முடியும். ஒரு தீர்வு காணமுடியும். அதிகாரிகள் மட்டும் பங்கேற்றால், இந்த பேச்சு வார்த்தையால் எந்த பயனும் ஏற்படாது.” என்று தெரிவித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்