Aran Sei

பட்டியலினத்தவரை காலணியால் அடித்த தொழிலதிபர் – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

நூறு நாள் வேலையில் ஈடுபட்டுள்ள பட்டியலின பணியாளரை செருப்பால் அடித்த அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மீது காவல்துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள குழந்திரான்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தாள்ளம்மன் கோயில் அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைப்பெற்று வந்துள்ளது.  அப்பணியில், அதே கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற பணியாளரும் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

இந்நிலையில், இன்று (ஜனவரி 3) இந்தப் பணிகளை ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த  தொழிலதிபர் கரிகாலன் என்பவரும் மரக்கன்றுகள் நடுவதை பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது சிவகுமார் மரக்கன்றுகளுக்கு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதனை அவர் முறையாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொழிலதிபர் கரிகாலன் கவனித்துள்ளார். பிறகு, முறையாக மரக்கன்றுகளுக்கு கூண்டு அமைக்குமாறு சிவகுமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு, சிவகுமார் கரிகாலனை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் கரிகாலன் சிவகுமாரை தனது காலில் கிடந்த காலணியால் அடித்துள்ளார். இதனால் சிவகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

இதையடுத்து, இது குறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று விசாரணை மேற்கொண்ட கறம்பக்குடி காவல்துறையினர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிவக்குமாரை தொழிலதிபர் கரிகாலன் செருப்பால் அடித்தது உண்மை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கரிகாலன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யபட்டுள்ள கரிகாலன் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பாசறை செயலாளர் கருப்பையாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்