Aran Sei

நான் பாஜகவில் இணைகிறேனா ? நடிகர் சந்தானம் பதில்

credits : hindu tamil

”நான் பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவல் தவறு, அப்படியான எண்ணம் எனக்கு இல்லை” என்று திரைப்பட நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்..

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் உடன் நவம்பர் 10-ம் தேதி முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தானம் நடித்த ”பிஸ்கோத்” படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதையொட்டி சென்னை பிரசாத் லேபில் பிஸ்கோத் படக்குழுவினருடன் நடிகர் சந்தனம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.  அப்போது, பேசிய அவர், ”தமிழ்நாடு ரசிகர்களுக்கு  கை கூப்பி நன்றி தெரிவித்து கொள்கிறேன், என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் இப்படி பயந்ததே இல்லை. பல தடைகளை தாண்டி தான் பிஸ்கோத் படத்தை திரையரங்கில் வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

”தமிழ் சினிமாவிற்கே இது வெற்றி தான். இந்த கொரோனா காலத்தில் திரையரங்கில் வந்து மக்கள் ஆதரவு தருகின்றனர். என்னுடைய படம் திரையரங்கில் வெளியானது வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறது” என்று சந்தானம் கூறியுள்ளார்

தொடர்ந்து பேசிய அவர் “திரையரங்கில் அனைவரும் கை தட்டி வரவேற்கும் மகிழ்ச்சி, ஒடிடியில் ( ஓவர் தி டாப் – இணைய திரை) படம் பார்த்தால் கிடைக்காது, சினிமா என்பது வியாபாரத்தை தாண்டிய விசயம் திரையரங்கில் சினிமா வெளியாவது மட்டுமே நன்மை. அதனால் தான் திரையரங்கில் படம் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

”கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் திரையரங்கில் 50 சதவீத இருக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்தால் கூட முக கவசம் அணிவது, சனிடைசர் உபயோகிப்பதை தொடர்ந்து மக்கள் பயன்படுத்த வேண்டும், வரும் தலைமுறைக்கு இந்த பழக்கத்தை கற்று கொடுத்தால் எந்த வைரஸ்ஸும் நம்மை தாக்காமல் காத்து கொள்ளலாம்” என்று சந்தானம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் பாஜகவில் இணைவதாக  பரவி வரும் தகவல் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சந்தானம் ”இது பிஸ்கோத் படத்தை விட பெரிய காமெடியாக உள்ளது என்றும் தான் பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவல் தவறு, அப்படியான எண்ணம் எனக்கு இல்லை ”என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

திரையரங்கு வாடகை குறைக்கப்படவில்லை, நடிகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று பாரதிராஜா கூறிய கருத்துக்கு பதிலளித்த நடிகர் சந்தானம், ”சூழ்நிலையை பொருத்தே சம்பளத்தை குறைக்க முடியும் என்றும்  மக்களுக்கு பிடித்த படங்களை எடுத்தால் கண்டிப்பாக நல்ல முறையில் வரவேற்பு கிடைக்கும். எந்த நடிகர்களும் உதவி செய்யாமல் இல்லை அடுத்து அடுத்த படம் எடுத்து கொண்டு தான் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்