Aran Sei

காவி திருவள்ளூவர் : தவறுதலாக ஒளிபரப்ப பட்டுவிட்டது – அமைச்சர் செங்கோட்டையன்

credits : kalaignar seithigal

தமிழக அரசு நடத்தும் கல்வி தொலைகாட்சியில் வெளியான திருவள்ளுவரின் புகைப்படமும் காவியில் இடம்பெற்றுள்ளது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக்த்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி விலக வலியுறுத்தல்

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் பண்பாட்டுச் சின்னமான ஜல்லிக்கட்டு தொடங்கித் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீது மத்திய பி.ஜே.பி அரசு தொடுக்கும் எல்லாவிதத் தாக்குதல்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்முகத்தோடு வரவேற்று வெண்சாமரம் வீசுவதின் மூலம் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே அ.தி.மு.க அமைச்சர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கான எண்ணிறைந்த எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்” என்று கூறியுள்ளார்.

வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி

”தமிழர்தம் தொல் பெருமையைப் பறைசாற்றும் கீழடி நாகரீகத்தைத் தமிழர் நாகரீகம் அல்ல; அது பாரதப் பண்பாடு என வாய் கூசாமல், நாக்கில் நரம்பின்றி சொன்னவர் தான் தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவே இருக்கின்றார் என்பது அ.தி.மு.க ஆட்சியின் வெட்கக்கேடான வரலாறு” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

”பா.ஜ.க அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ் நாட்டில் இந்தித் திணிப்புக்கும், கல்வியில் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் வழிவகுக்கும் போது, மொழி உணர்வு கிஞ்சிற்றும் இன்றி அதனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் துணிந்தவர்கள்தான் அ.தி.மு.க அரசின் அமைச்சர்களாகக் கொலுவீற்றுப் பதவி சுகத்தின் கடைசிச் சொட்டையும் விடாமல் உறிஞ்சிக் கொள்ள வேண்டுமென்று காத்திருக்கின்றார்கள்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

”காவிகள் நச்சு எண்ணம் கொண்டு தங்கள் திட்டங்களைத் தமிழ் மண்ணில் நிறைவேற்றிக் கொள்ளத் தலைப்படும் போதெல்லாம் வாய் மூடி மெளனிகளாய் இருப்பது அ.தி.மு.கவின் வழக்கம்” என்று கூறியுள்ளார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உலக தத்துவத்தை எடுத்துச் சொன்ன அய்யன் வள்ளுவருக்குக் காவி உடை தரித்து அவருக்குக் ‘காவி வண்ணம்’ பூசும் கைங்கர்யத்தைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சி செய்து இளம் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கி உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மனுதர்மம் குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பேசியதைத்தான் திருமா பேசியுள்ளார் – ஸ்டாலின்

”அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்கவும் தமிழக அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ”உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல. அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

”வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்- விசிக போராட்டம்

”எனவே, தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 2, 2019 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்” என்று எதிர்கட்சிகளையும் ஊடகங்களையும் விமர்சித்து பதிவிட்டிருந்தது.

அந்த பதிவில் மேற்கோளாக காட்டப்பட்டிருந்த திருவள்ளுவர் காவி நிற உடையை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போதே, பாஜக அனைத்தையும் காவிமயமாக்க முயல்கிறது என தமிழக எதிர்கட்சிகள் உட்பட பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இதைடுத்து #bjpinsultsthiruvalluvar எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படம் ஒளிபரப்பாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியில் காவி திருவள்ளுவர் படம் குறித்து கருத்து தெரிவித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ”கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் ஒளிபரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறுதலாக அவ்வாறு ஒளிபரப்பட்டுவிட்டது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிற உடை மாற்றப்பட்டுவிட்டது’ என்று நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்