Aran Sei

சசிகலா விரைவில் விடுதலையா? – உண்மைத் தகவலைக் கூறிய உள்துறை செயலாளர் ரூபா

Credits The Hindu

ர்நாடகச் ​​சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா தண்டனைக் காலம் நிறைவடையும் ​​​​​​​​​​​​​முன்னரே விடுவிக்கப்படலாம் என்று சில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், கர்நாடக உள்துறை செயலாளர் டி.ரூபா இதை முற்றிலும் மறுத்துள்ளார்.

​அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலாவுக்குச் ​சொத்துக்குவிப்பு வழக்கில்​ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ​2017 பிப்ரவர் 14-ம் தேதி ​​​​​​​​கர்நாடக பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா ​அடைக்கப்பட்டார்.

அவருடைய தண்டனைக் காலம் பிப்ரவரி 2021-ல் முடிவடையும் நிலையில், ​நன்னடத்தை காரணமாக சிறைதண்டனை குறைக்கப்பட்டு சசிகலா விரைவில் விடுவிக்கப் படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

​சசிகலாவின் ​விடுதலை குறித்து அவருடைய ​வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ​”கர்நாடகாவில் அக்.27-ம் தேதி (இன்று) வரை தசரா விடுமுறை. இதற்குப் பிறகு, சசிகலா விடுதலை தொடர்பாக நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இருந்து தகவல் வந்ததும் அபராதத்தைச் செலுத்துமாறு சசிகலா கூறியுள்ளார். அபராதம் செலுத்தும் நடைமுறை ஒரு நாளிலும் முடியலாம், ஓரிரு நாளும் ஆகலாம்.​” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.​

மேலும், “​சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்ற 36-வது சிறப்பு நீதிமன்றத்தின் பணி முடிந்துவிட்டது. தற்போது, அபராதம் செலுத்துவது தொடர்பான உத்தரவைப் பொறுப்பு நீதிமன்றம்தான் பிறப்பிக்கும். உத்தரவு வந்ததும் அபராதத்தைச் செலுத்திவிடுவோம். அதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம்.​” என்று தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ​​சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக உள்துறை செயலாளர் டி.ரூபா​ அரண்செய் ​க்​கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில்​,

“தண்டனைக் காலம் முழுவதும் நிறைவடைவதற்கு முன்னதாக சசிகலா விடுதலை ஆவதற்கான பேச்சுக்கே இடமில்லை. அதற்கான எந்த ​முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.” என்று திட்டவட்டமாக ​கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்து வந்த டி.ரூபா, பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா `விதிமுறைகளை மீறி​ ​சட்டவிரோதமான முறையில் சலுகைகள் அனுபவித்து வருவதாகப் புகார் கூறினார்.

இதுதொடர்பாக​ உள்துறை அமைச்சகத்திற்கும், அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த டி.ரூபா, சிறப்பு சலுகைகளுக்காக சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அதே சமயம் சசிகலா போன்ற தோற்றமுடைய ஒருவர், ஒரு பையுடன் சிறையிலிருந்து வெளியே செல்வது போன்ற காட்சிகள் வெளியாகின.

புகார் அளித்த சில நாட்களிலேயே ரூபா, பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக  இடமாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது கர்நாடக மாநில உள்துறைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் ரூபா, ​ ​இந்தியா அஹெட் நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்குச் ​சசிகலா விடுதலை குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

​​​அதில், “சொத்துக்குவிப்பு வழக்கில்​ உச்ச நீதிமன்றம்​​ ​ச​சிகலாவுக்குத் ​தண்டனை வழங்கியுள்ளது. சிறைத்துறை விதிகளின்படி, இப்படியான வழக்கில் ​சிறைப்படுத்தப்பட்டுள்ள நபர், உண்மையாகவே சிறையில் நல்ல முறையில் நடந்துகொண்டாலும் கூட, நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு தண்டனைக் காலம் முடிவடையும் முன்பு விடுதலை செய்யப்படுவது என்பது சாத்தியமே இல்லை. சிறைத்துறை விதிகள் அதை அனுமதிப்பதில்லை.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து அரண்செய் டி.ரூபாவை தொடர்புகொண்டு கேட்டபோது “அப்படிப்பட்ட முன்னெடுப்பு எதுவும் இல்லை” என்று பதிலாளித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்