Aran Sei

பேரறிவாளனை விடுவிக்க பாஜக நிர்வாகி ஹண்டே கோரிக்கை – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தமிழக முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக நிர்வாகியுமான எச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் எச்.வி.ஹண்டே.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 2018 செப்.9-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது” என்று  நினைவுபடுத்திக் கூறியுள்ளார்.

“இதுதொடர்பான வழக்கு கடந்த 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 7 பேரையும் விடுதலை செய்வதில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார். பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) அறிக்கைக்காகக் காத்திருப்பது வீண்” என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்னமும் ஒரு தெளிவான நிலை ஏற்படாமல் உள்ளது. எனவே, தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்குக் கடந்த ஜூலை 31-ம் தேதி கடிதம் அனுப்பியதாக எச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அரசியல் காட்சிகள் ஆதரவு தெரிவிப்பது மோசமான ஒன்று” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“கொலைக் குற்றவாளிகளை விடுவித்தால் நீதிமன்றமும் காவல் நிலையமும் எதற்கு” என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்