Aran Sei

‘கண்ணா.. இப்பவும் இல்ல எப்பவும் இல்ல.. எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச’

ப்ப இருக்க சிவகார்த்திகேயன் காலத்தில் இருந்து, இன்றுள்ள ராமராஜன், கிழக்கே போகும் ரயில் சுதாகர் காலம் வரைக்கும், எல்லா தரப்பு மக்களும் பொழுது போகாம காத்துட்டிருந்தது ரஜினியோட அரசியல் எண்ட்ரி. ஒருவழியா, அடுத்த மாசம் கட்சி ஆரம்பிக்கிறதாவும், அதுக்கு பேர இந்த மாசம் 31 அறிவிக்கிறதாவும் ‘இப்ப இல்லனா எப்பவும் இல்ல’, ‘மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்’ என்று இடி முழங்க ( புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் அன்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது) தனது அரசியல் வரவை அறிவித்தார்.

“அரசியலுக்க வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி

இதைக் கேட்ட ரஜினியின் ரத கஜ துரக பதாதிகள் படை, பேஸ்புக், ட்வீட்டர் என்று எல்லா இடத்திலும் குதூகலித்திருந்தது. பழைய மணி ஹைஸ்ட் சீரிஸ் தீம் ம்யூஸிக் தொடங்கி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி தீம் ம்யூஸிக் வரை எல்லா எடிட்டும் போட்டு தலைதீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்தார்.

கல்யாண பந்தலில் காட்ஜில்லா நுழைந்தது போல, கல்லாப்பெட்டிக்குள் கண்டெயினர் லாரி நுழைந்தது போல, க-ல வேற என்ன சொல்லலாம்.. ஆங்ங்ங்.. கமலாலயத்தில் ரஜினிகாந்த் நுழைந்தது போல.. ரஜினிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது.

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்போலோ சொன்ன மெடிக்கல் சர்டிபிக்கெட்டுடன் போயஸ் கார்டனில் கூடடைந்தார்.

இந்நிலையில், இன்று தான் அரசியலுக்கு வரப்போவதில்லை, ‘இப்பவும் இல்ல எப்பவும் இல்ல’ என்று பகிரங்கமாக பின்வாங்கியுள்ளார். யாராவது கேட்டால், ‘என்ட கெணறு வெட்ன ரசீது இருக்குடா’ என்று அப்போலோ சர்ட்டிபிக்கெட்டை காட்ட வாய்ப்புள்ளதாக ஜெமினி பிரிட்ஜில் இருவர் பேசிக்கொண்டு போனதை கண்டேன்.

’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

மேலும், அப்போலோ ஆஸ்பத்திரி தமிழக அரசியலில் மிக முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துவதிலும் ’இட்லி’ விற்பனையிலும் உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்கள்.

ரஜினியின் இந்த முடிவை ஏற்காத அவரின் ரசிகர்கள் சிலர் அவரின்  வீட்டு வாசலில் குவிந்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, ரஜினியின் தீவிர நண்பரான தமிழ் நீர்வீழ்ச்சி மணியனுடைய நிலைமையும், ஜகபா-வின் முருங்கை ஸ்பெஷல் அவியல் பிரிவு தலைவரா இருந்து பின் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மாறிய ஆக்‌ஷன் கிங் மூர்த்தியினுடைய நிலைமையை என்னவாக இருக்கும் என்று ரஜினி ரசிகர் மன்றம், மத்திய தரைகடல் கிளையின் கௌரவ தலைவரும் என் நண்பருமான ’பேட்டை’ பேட்மேன் பறந்தபடியே தன் கவலையை வாட்சப்பில் பகிர்ந்திருந்தான்.

ரஜினிகாந்த் : விளக்கம் தருவாயோ வதந்தியே?

அடுத்ததாக என் நண்பரும் யூட்யூப் பிரபலமுமான மாரிதாஸை பற்றியும் இங்கே பேச வேண்டியுள்ளது. ரஜினி போயஸ் கார்டனில் பொட்டியை தூக்கினால், ‘ரஜினியின் பெட்டியில் என்னென்ன கலர் லுங்கி?’, ‘பூட்ன கேஸை பார்த்து பயப்படும் பெட்டிகேஸுகள்’ என்று 38 நிமிஷத்திற்கு 53 வீடியோ போடுவார். அவரின் ‘வாடக வீட்ல இருக்கியா? இனி ரஜினி அரசே உனக்கு வாடக குடுக்கும்’,  ’நீ 90ஸ் கிட்ஸா? இந்தா டிண்டர் அக்கவுண்ட் – ரஜினியின் அடுத்த திட்டம்’ போன்ற வீடியோக்கள் பிரசித்தம்.

இவரைக் குறித்து ’ரஜினி ரசிகர் மன்றம், ஜி-8 நாடுகள், ஜி-20 நாடுகள் (கடைசி 19 நாடுகள்), காமன்வெல்த் நாடுகள், வைகை நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள தேர்வுநிலை ஊராட்சிகள் ஆகியவற்றின் கூட்டு தலைமை கிளையின் நிரந்தர தலைவரும் முன்னாள் இயக்குனருமான பாயும் புலி பிரவின்காந்த், தன் கவலையை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்