Aran Sei

’ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் பிற அரசியல் கட்சியில் இணையலாம்’-வெளியானது புதிய அறிவிப்பு

ஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் பிற அரசியல் கட்சியில் இணைய விருப்பபட்டால், மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டு இணைந்து கொள்ளலாம் என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பை மன்ற நிர்வாகி V.M.சுதாகர் வெளியிட்டுள்ளார்.

முன்னர், 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர், அவர் தீவிர அரசியலில் களமிறங்குவது குறித்து தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை கூறிவந்தார்.

’ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது’ – வைகைச்செல்வன்

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி, ரஜினிகாந்த் தனது மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சியைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.

முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்ட ரஜினி, “வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்” என்று பதிவிட்டிருந்தார்.

“தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்!” என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

அர்னாப் கோசாமி மீது தேசவிரோத குற்றச்சாட்டு – பாகிஸ்தானின் சதி என்று கூறுகிறது ரிபப்ளிக் தொலைகாட்சி

இதையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரை ரஜினி அறிமுகம் செய்தார். இவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர். காந்திய மக்கள் இயக்த்தின் தலைவரான தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.

அண்ணாத்த படப்பிடிப்பின் போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்த ரஜினிக்கு, மருத்துவர்கள் அவரின் உடல்நிலைக் குறித்து அறிவுறுத்தியதன் காரணமாக  “கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.

’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி V.M.சுதாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “அவர்கள் வேறு கட்சிகளில் இருந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது” என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்