Aran Sei

‘கருவூலத்தைக் காலி செய்த அரசு; கடன் வாங்கி பொங்கல் பரிசு’- பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு

மிழக அரசின் கருவூலம் காலியாக இருப்பதாகவும், பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்க ஆளும் அதிமுக கடன் வாங்கியுள்ளதாகவும் திமுக சட்டசபை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 5) மதுரை மத்திய சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை திமுக எதிர்க்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த அனைவருக்கும் நிதி உதவியாக 5,000 ரூபாய் வழங்க திமுக தலைவர் கோரினார். ஆனால், அப்போது, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் அதிமுகவும் இதைப் புறக்கணித்து, இப்போது அதை செய்து, அதற்கான பாராட்டை எடுத்துக்கொள்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

மேலும், “ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் பணத்தை வீணடிக்கின்றன. அரசாங்கங்கள், குடியிருப்பாளர்களிடமும், வரி செலுத்தும் குடிமக்களிடமும் கலந்தாலோசிக்காமல், அரசுகள் திட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றன. ஆனால், இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.” என்று பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் விமர்சித்துள்ளார்.

நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு அரசு அவசரமாக நிதி ஒதுக்கியுள்ளது. கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு விருப்பமான ஆட்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் நிதியை அபகரித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்