Aran Sei

தனியாருக்கும் வழங்கப்படும் மின்வாரியப் பணிகள் – ஊழியர்கள் போராட்டம் – ஸ்டாலின் கண்டனம்

மின்வாரியத்தில் உதவியாளர், கம்பியாளர் பணியிடங்களை  தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கும் முறையினை அரசு  நடைமுறைப்படுத்த  உத்தரவிட்டுள்ளதை கண்டித்து, திருச்சி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்துறை நிறுவனமான மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, துணை மின் நிலையங்களை  தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

 

இந்நிலையில், இன்று (டிசம்பர் 21) தமிழக அரசின் இந்த உத்தரவை கண்டித்து திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் 1500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நுகர்வோரின் மின்தடையை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் இந்த ஹெல்ப்பர் மற்றும் கம்பியாளருக்கான 31 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள், ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் கேங்மேன் பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களை நிரப்பாமல் தமிழகம் முழுவதும் காலி பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கு மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.

‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா

இந்த உத்தரவு மின்வாரியத்தை தனியார்மயத்தை நோக்கி தள்ளும் வகையில் உள்ளதால், இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனை ரத்து செய்யும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இன்று (டிசம்பர் 21) திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

”பல கோடிக்கணக்கில் ஊழல் செய்வதற்காக, மின்வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாகத் திட்டமிட்டுத் தனியாருக்குத் தாரைவார்த்துவரும் நிலையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவிலும் மண் அள்ளிப்போடும் மாபாதகச் செயல் அரங்கேறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

‘அந்த கரடி பொம்மை எவ்வளவு?’ – அமித்ஷாவை கிண்டல் செய்த ஸ்டாலின்

மேலும், “மின்வாரியத்தில் ஏற்கெனவே பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட 380 ரூபாய் தினக்கூலியைத் தர மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடம் தினக்கூலிக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.412 என அதிகப்படுத்தி ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன?” என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்