Aran Sei

‘பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?’ – பதிலளிக்க மறுத்த மத்திய அமைச்சர்

டுத்தாண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்ற  கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

இன்று (டிசம்பர் 25) சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை, பிரகாஷ் ஜவடேகர் மேடையில் அறிமுகம் செய்துள்ளார்.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

அதைத் தொடர்ந்து பேசிய போது, “வரக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும். நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ள நிலையில்,  பாஜகவே ஒரு குடும்பமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது என்றும் “பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறெந்த மாநிலத்திலும் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாபில் மட்டுமே தவறான புரிதலால் போராட்டம் நடைபெறுகிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா ராமதாஸ்?

இதனை அடுத்து, அடுத்தாண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி நிறுத்தப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

மீண்டும் செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பிய போதும் அவர், பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும், தங்களது கட்சிக்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி கட்சி தலைமை தான் அறிவிக்கும். இதுபோன்ற கேள்விக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்பே தெரிவித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்